வேலையில்லா பட்டதாரி படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார். தனுஷ் பாடியுள்ள இந்த பாடலில் வரும் பெண் குரலுக்கு தான் பாடவிரும்புவதாக அமலாபால் அனிருத்திடம் கூறியுள்ளார். ஆனால் அமலாபாலுக்கு வாய்ப்பு கொடுக்க அனிருத் சம்மதிக்கவில்லை. அமலாபாலின் பேச்சில் மலையாளம் கலந்து வருவதால் அவரால் தமிழ் உச்சரிப்பை சரியாக கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தில் பெண் பாடகிகளுக்கு அதிக வேலையில்லை என்றும், ஒன்றிரண்டு வரிகள் மட்டுமே பெண் குரலுக்கு வாய்ப்பு உள்ளதால் அடுத்த படத்தில் கண்டிப்பாக அமலாபாலுக்கு வாய்ப்பு தருவதாகவும் கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் தனுஷ், இந்த விஷயத்தில் தலையிடாமல், அனிருத்தின் முடிவுக்கு தான் சம்மதிப்பாக கூறி ஒதுங்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வேல்ராஜ் இயக்கியிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தமிழ் படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் இதுவரை ரூ.28 கோடி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரூ.40 கோடிக்கு சன் பிக்சர்ஸ் இந்த படத்தை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே