ஆனால் இந்த காதல் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஹன்சிகாவை சந்தித்த சில சீனியர் ஹீரோயின்கள், சிம்புவை காதலிக்காதே என்று அட்வைஸ் தந்தனர். அதை அவர் காதில் வாங்கவில்லை. ஆனால் ஹன்சிகாவுக்கு வந்த பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதை கண்ட அவரது அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார். அதையும் மீறி ஹன்சிகா சிம்புவை காதலித்து வந்தார். கடந்த மாதம் சிம்புக்கு பிறந்த நாள். அப்போது நேரில் சென்று அவருக்கு வாழ்த்து கூறினார். இந்த சம்பவம் பற்றி அறிந்த ஹன்சிகாவின் அம்மா கோபம் அடைந்தார். ‘இனி சிம்புவை காதலிக்க கூடாது. அப்படி செய்தால் நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன்‘ என்று ஹன்சிகாவை மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன் ஹன்சிகாவை கண்காணிக்க தொடங்கினார். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று கண்டிஷன்போட்டு அவரை வீட்டிலேயே சிறை வைப்பதுபோல் காவல் காக்க தொடங்கினார். ஹன்சிகாவுக்கு துணையாக அவரது தாய் மட்டுமே இருக்கிறார். எனவே அவரை பிரிய ஹன்சிகாவின் மனம் இடம் தரவில்லை. இதையடுத்தே சிம்புவை பிரிய ஹன்சிகா முடிவு செய்தார்.
இதையறிந்த சிம்புவும் தன்னால் ஹன்சிகாவுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் அவரை மறக்க முடிவு செய்தார். இதையடுத்து, ஹன்சிகாவுடனான என்னோட உறவு இத்துடன் முறிந்துவிட்டது. இருவரும் பேசியே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இதற்குமேல் எதுவும் கூற விரும்பவில்லை‘ என்று சிம்பு வெளிப்படையாக நேற்று தெரிவித்தார். ஹன்சிகாவும் சிம்புவை பிரிந்துவிட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ‘நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் இணைந்து நடிப்பதுதான் ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதா? என்று ஹன்சிகா தரப்பில் கேட்டபோது அதற்கு பதில் தர மறுத்துவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே