சகாப்தம் என படதிற்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படபூஜை, கேப்டனின் இல்லத்திலேயே வெகுவிமரிசையாக நடந்தது. மேலும் சண்முக பாண்டியனை அன்று படபூஜையில் ஏராளமான திரையுலகினரும் பங்கேற்று வாழ்த்தினர்.
இப்படத்தின் கதை ஒரு புதுமுகத்துக்கான, குடும்பம் , காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாம். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் இன்னும் ஹீரோயின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. காரைக்குடியில் 50 நாட்கள், மலேசியாவில் 50 நாட்கள் என படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது பார்லிமென்ட் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் வேலையில் இதுதொடர்பாக பிசியாக இருக்கும் கேப்டன், நேரம் கிடைக்கும்போது தன் மகன்பட டிஸ்கசனிலும் அடிக்கடி கலந்து கொண்டு ஆலோசனை தருகிறாராம். படத்தின் கிளைமாக்ஸ் பக்காவாக பேசப்படுமாம். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே 85 கிலோவாக இருந்த தனது எடையை 65 கிலோவாக குறைத்து, 6.4 அடியில் அனைவரையும் வியப்பாக அண்ணாந்து பார்க்க வைக்கிறாராம் சண்முகபாண்டியன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே