சூரஞ் பர்ஜாத்யாவின் படத்தில் சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஏற்ற ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.சல்மானுக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்து ஹீரோவிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர்.தீபிகா மிகவும் பிசியான நாயகி. என் படத்திற்கு பிசியாக இருக்கும் நடிகை வேண்டாம் என்று சல்மான் தெரிவித்துவிட்டாராம். முன்னதாக நாயகி தேர்வில் தான் தலையிடுவது இல்லை என்று சல்மான் கூறியிருந்தார்.
சில காலமாக சல்மான் தனது படங்களில் புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார். அப்படி சல்மான் கானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான் சினேகா உல்லல், ஜரீன் கான், சோனாக்ஷி சின்ஹா, டெய்சி ஷா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திலும் புதுமுக நடிகையை ஹீரோயினாக்குமாறு கூறுவாரோ சல்மான்? பொறுத்திருந்து பார்ப்போம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே