‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் கெட்டப் என்ன? இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேட்டி…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தை அடுத்து உத்தமவில்லன் படத்தில் நடிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், அந்த படத்தில் தன்னுடைய கெட்டப் எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.சூப்பர் ஸ்டாராக நடிக்கும் கமல்ஹாசன், உத்தம வில்லன் படத்தில் வரும் தோற்றத்தில் புதுமையாக ஏதாவது புகுத்த வேண்டும் என்று கடந்த ஒரு மாதகாலமாக சிந்தித்து கொண்டிருந்தாராம்.

ஹாலிவுட் மேக்கப்மேன்கள் சிலரை வரவழைத்து பலமணி நேரங்கள் செலவு செய்து பலவித கெட்டப்புகளை போட்டு பார்த்து கடைசியில் நாயகன் படத்தில் வரும் இளமையான கமல் போன்ற தோற்றத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.ஜிப்ரான் இசையில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படத்தின் கமல்ஹாசன் இரண்டு பாடல்களை எழுதி பாட உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஒலிப்பதிவு மிக விரைவில் தொடங்கும் என ஜிப்ரான் தெரிவித்துள்ளார். இந்த படத்தை குறித்து ரமேஷ் அரவிந்த் தனது ஃபேஸ்புக் தளத்தில் ரசிகர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

கமல்ஹாசனை முதல் படத்திலேயே இயக்குவதில் எவ்வித நெருக்கடியும் இல்லை என்றும்,கமல் தன்னுடைய வேலையில் பாதியை அவரே இழுத்துபோட்டு முடித்துவிடுவார் என்பதால் எனக்கு டைரக்சன் குறித்த கவலை இல்லை என்றும் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.என கூறினார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago