மணிரத்னத்தின் புதிய படத்திற்கும் கமலின் தசாவதாரம் படத்திற்கும் உள்ள தொடர்பு!…

சென்னை:-மணிரத்னம் தற்போது புதிய படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கின்றார். மகேஷ்பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யாராய், நடிக்க இருக்கும் இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை முற்றிலும் முடித்துவிட்டாராம் மணிரத்னம். தற்போது இந்த படத்திற்கு தேவையான பிற தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம்.

மணிரத்னம் படத்தில் மிக முக்கிய அம்சமாக விளங்குவது ஒளிப்பதிவு. இதுவரை அவர் மிகபிரபலமான ஒளிப்பதிவாளர்களை மட்டுமே தனது படத்தில் பயன்படுத்தியுள்ளார். தளபதி, இருஅர், தில்சே, ராவணன் போன்ற படங்களுக்கு சந்தோஷ் சிவனும், நாயகன், மெளனராகம், அக்னி நட்சத்திரம், அலைபாயுதே போன்ற படங்களுக்கு பி.சி.ஸ்ரீராமும், பம்பாய், குரு, கடல் போன்ற படங்களுக்கு ராஜீவ் மேனனும், ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கு ரவி கே.சந்திரனும், அஞ்சலி படத்திற்கு மது அம்பாட் அவர்களும், பணிபுரிந்துள்ளனர். மணி ரத்னத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்தின் கேமராமேனான பணியாற்றியவர் பாலுமகேந்திரா எனபது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது புதிய படத்திற்கான ஒளிப்பதிவாளரை தற்போது தேர்ந்தெடுத்துவிட்டார். அவர்தான் ரவிவர்மன். இவர் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இவர் பணிபுரிந்த தசாவதாரம் படத்தை பார்த்துதான் தற்போது இவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் மணிரத்னம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago