இந்த படத்தை எம்.ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை பாலசுப்பிரமணியம் ஒளிபதிவு செய்கிறார். தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் உதயநிதி இந்த படத்தை தயாரிக்கின்றார்.இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் ஜெகதீஷின் உதவியாளர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியே உதயநிதி – நயன்தாரா திருமணத்தில் இருந்துதான் தொடங்குகிறதாம். கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலில் உதயநிதி – நயன்தாரா திருமணக்காட்சி படமாக்க உள்ளது.
திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் வரும் காதல், ஊடல், சச்சரவு, பிரச்சனைகளை இவைகளைத்தான் காமெடியாக சொல்லி கலக்க போகிறார்களாம். உதயநிதி – நயன்தாரா தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க வரும் நண்பனாக சந்தானம் நடித்துள்ளார். இதுதான் கதை என்று ஜெகதீஷின் உதவியாளர் ஆர்வக்கோளாறில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை வெளியானதால் இயக்குனர் ஜெகதிஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். உதவி இயக்குனரை டிஸ்மிஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் நான்கு பாடல்களுக்குரிய டியூனை கம்போஸ் செய்துவிட்டாராம். மிக விரைவில் ஒலிப்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே