பிரபு கேரக்டருக்கு அஜீத் சூப்பர் பொருத்தமாக இருப்பாராம். அதேபோல கார்த்திக் கேரக்டருக்கு விஜய்தான் சரியான மேட்ச்சாம். ஏன் அஜீத் என்று கேட்டால் பிரபு மாதிரியே இவரும் கொஞ்சம் குண்டா இருக்காரு, அமைதியாப் பேசுறாரு. கார்த்திக் மாதிரியே விஜய் துறுதுறுன்னு இருக்காராம்
விஜயக்குமார் கேரக்டருக்கு அவரையே போடலாம் என்பது இந்தப் பையன் கூறும் ஆலோசனை. ஒரு வேளை அவர் சரிப்பட்டு வராவிட்டால் சரத்குமாரைப் போடலாமாம். அதுவும் சரிவராவிட்டால் இருக்கவே இருக்கிறாராம் பிரகாஷ் ராஜ்.அமலா கேரக்டருக்கு அமலா பால் சரியான சாய்ஸாக இருக்குமாம். ஏன் அப்படி என்று கேட்டால்.. பெயரிலேயே பொருத்தம் இருக்கிறதே.. பிறகெதுக்கு புதுசாக தேடிக் கொண்டு என்று பட்டென்று பதில் வருகிறது.
நிரோஷா நடித்த கேரக்டருக்கு ஹன்சிகாதான் செம பொருத்தமாக இருப்பாராம். ஏன் அனுஷ்கா நல்லாருக்காதா என்று கேட்டால், விஜய்க்கு பொருத்தமான ஜோடி ஹன்சிகாதான் என்று பதில் வந்தது. ஏன் திரிஷா சரியா வராதா என்று நாம் அப்பாவித்தனமாக கேட்டால், ஹன்சிகாதான் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட் என்று படாரென்று பதில் வருகிறது.படத்திற்கு இசை கண்டிப்பாக யுவன் ஷங்கர் ராஜாதான் போட வேண்டுமாம். அவர்தான் ராஜா ராஜாதி ராஜன் பாட்டை இந்தக் காலத்து இளசுகளுக்கேற்ற வகையில் சரியாக ரீமேக் செய்யவாராம்.
டைரக்டராக மணிரத்தினமே இருக்கலாமாம். ஒரு வேளை அவருக்கு சரிப்பட்டு வராவிட்டால், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவை விட்டு இயக்க வைக்கலாமாம். அவர்தான் அண்ணன், தம்பி கதையை சரியாக இயக்குகிறாராம்.ஒரு கேரக்டருக்கு சரண்யா பொன்வண்ணன் ஓ.கேவாம். இன்னொரு கேரக்டருக்கு ராதிகா அல்லது ரோஜாவாம்.அக்னி நட்சத்திரம் என்று வந்து விட்டால் ஜனகராஜை மறக்க முடியுமா என்ன.. அந்த கேரக்டருக்கு பரோட்டா சூரிதான் சூப்பராக செட் ஆகுமாம். காரணம், ஜனகராஜ் போல கலகலப்பான குரல், காமெடிக்கு இவர்தான் பொருத்தமாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே