சமீபகாலமாக இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக மும்பை பத்திரிகைகளில் தகவல் வெளியாகி வருகிறது. ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பதற்கு ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. மேலும் அவரது அன்றாட நிகழ்ச்சி விவரங்களையும் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஜெயா கூறி வந்தார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. சொந்த விஷயங்களில் அவர் தலையிடுவதாக நினைத்தார்.இதை தவிர்க்கும் விதமாக அபிஷேக் பச்சனுடன் தனிக்குடித்தனம் செல்ல ஐஸ்வர்யா ராய் எண்ணினார். அதற்கு ஜெயா பச்சன் அனுமதிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜெயா பச்சனும், ஐஸ்வர்யாராயும் சென்றனர். அப்போது போட்டோகிராபர்கள் ஐஸ்வர்யாராயை படம் பிடிக்க போட்டி போட்டதுடன் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று பேர் சொல்லி அழைத்து போஸ் கொடுக்க கேட்டனர். இதைகண்ட ஜெயா பச்சன், அவர் என்ன உங்க கிளாஸ்மேட்டா? எப்படி பேர் சொல்லி அழைக்கலாம் என்று சத்தம்போட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த தொழில் அதிபர் இல்ல விழா ஒன்றில் ஜெயா பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யாராய் பங்கேற்றனர். முன்னதாக விழாவுக்கு ஜெயா தனியாகவே வந்தார். விழாவில் அபிஷேக்குடனே ஐஸ்வர்யா நின்றிருந்தார். ஜெயாவை அவரோ, ஐஸ்வர்யாவை ஜெயாவோ முகம் கொடுத்து பார்க்கவில்லை. இதை கவனித்தவர்கள் இருவரின் மோதல் குறித்து முணுமுணுத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே