ரோம பேரரசு பாம்பய் என்ற புதிய நகரத்தை உருவாக்குகிறது. அந்த நகரத்துக்கு அடிமை வீரனாக ஹாரிங்டன் அழைத்து வரப்படுகிறார். அவரின் திறமையால் கவரப்பட்டு கதாநாயகனை விரும்புகிறார் நாயகி எமிலி. பாம்பய் நகரத்தின் நிர்வாகியின் மகளான அவளை ரோம பேரரசின் தளபதி அடைய நினைக்கிறார். அதனால் தளபதி கதாநாயகனை கொல்ல நினைக்கிறார்.கொலோசியம் மைதானத்தில் அடிமை வீரர்கள் சண்டையில் நாயகனை கொல்ல முயற்சிக்கும் போது நகரத்தின் அருகாமையில் இருக்கும் எரிமலை வெடித்து நகரம் அழிகிறது. அந்த அழிவிலிருந்து கதாநாயகன் நாயகியை காப்பற்றினானா? என்பதே முடிவு.
கதாநாயகன் கிட் ஹாரிங்டன் நிஜமாகவே கிளாடியேட்டர் வீரன் போல் உடல் தகுதியோடு இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் இறுதியில் கதாநாயகியை காப்பாற்ற முயற்சிக்கிற காட்சியிலும் நம் கவனத்தை அவர் மீது படும்படியே சிறப்பாக செய்திருக்கிறார்.கதாநாயகியாக வரும் எமிலி ப்ரொவ்னிங்க் அழகாக இருக்கிறார். அதைத் தவிர படத்தில் அவருக்கு ஏதும் வாய்ப்பு இல்லை. கதாநாயகனின் நண்பராக வரும் அடிமை வீரர் அக்பஜே மிரட்டலாக இருக்கிறார்.கதாநாயகனுக்கு அடுத்து அவரே படத்தில் நம் மனதில் நிற்கிறார். படத்தின் பிரமாண்ட காட்சிகள், எரிமலை வெடிக்கும் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. நகரம் அழியும் காட்சிகளில் விஷுவல் எபெக்ட் குழு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கிளிண்டன் இசை படத்தை மேலும் பிரமாண்டமாக்கி காட்டுகிறது.
கொலோசியம் மைதானத்தில் அடிமை வீரர்களும் ரோம படையும் சண்டையிடும் காட்சியில் பின்னணி இசை நம்மையும் உற்சாகமாக்கி கைதட்ட வைக்கிறது. பாம்பய் நகரத்தை டாப் ஆங்கிளில் காட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.இறுதி காட்சிகளில் எடிட்டிங் செய்யப்பட்ட விதம் படத்தோடு ஒன்ற வைக்கிறது. முதலிலேயே எரிமலை வெடிக்க போகிறது என்று தெரிந்து விடுவதால் படத்தின் முடிவு இப்படிதான் இருக்கும் என்று கணிக்க முடிவது படத்தின் பலவீனம்.
எரிமலை வெடித்து சிதறும் காட்சிகளில் கதாநாயகன், நாயகி பாதிப்பு இல்லாமல் ஓடிவருவது என்னதான் ஹாலிவுட் பிரமாண்டம் என்றாலும் நம்பக தன்மையை குறைக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘பாம்பய்’ பிரம்மாண்டமான காதல்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே