முதலில் ஒரு சின்ன திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவரும் படிப்படியாக நிறைய திருமணங்களை நடத்தி முன்னுக்கு வருகிறார்கள்.இந்நிலையில் ஒரு மிகப்பெரிய திருமணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பார்ட்டி கொண்டாடும் நாணியும், வாணியும் போதையில் எல்லை மீற, நாயகி வாணி கபூரை 5 முறை லிப் லாக் செய்கிறார் நானி. அதன்பின் வாணிக்கு நானி மீது இருக்கும் காதல் புரிகிறது. நானியிடம் காதலைச் சொல்ல வரும்போது, ஒரு தவறான புரிதலால் இருவருக்கும் உள்ள ஈகோவால் பிரிகிறார்கள். அதன்பின் ‘கெட்டி மேளம்’ என்னானது, நானி-வாணி காதல் என்னானது என்பது மீதிக்கதை…
‘நான் ஈ’ புகழ் நானி நடித்திருக்கும் மூன்றாவது தமிழ் படம் தான் இந்த ‘ஆஹா கல்யாணம்’. ‘நான் ஈ’-யில் பார்த்த மாதிரியான அதே துறு துறு நானி. பாடி லாங்குவேஜை மட்டும் மாற்றியிருக்கிறார். அவ்வப்போது காமெடி செய்து கலக்கவும் வைக்கிறார்.நாயகியாக வாணி கபூர் அசத்தல். அவரின் நடிப்பு, டான்ஸ் அதையும் ஆஹா சொல்ல வைக்கிறது. படவா கோபி, பார்த்தசாரதி ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சிம்ரன்.
படம் முழுக்க கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு, மனதில் மெதுவாக இசைந்துக்கொண்டே இருக்கும் பின்னணி இசையும், பாடல்களும் ப்ளஸ். தரணின் இசையில் தல பாடலும், மழையின் சாரலும் ரசிக்க வைக்கிறது.கதையும், கதை நடக்கும் இடங்களும், அந்த திருமண வீடுகளும் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்பதால் வேறுமொழி (இந்தி) படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. வசனங்களின் மூலம் அந்த உணர்வை குறைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘ஆஹா கல்யாணம்’ கல்யாணங்களின் காதல்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே