மார்ச் 9ம் தேதி ‘கோச்சடையான்’ பாடல்கள் வெளியீடு…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ பட பாடல்கள் மார்ச் 9–ந் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பிப்ரவரி 28–ந் தேதி பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவ்விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 10–ந் தேதி ஐதராபாத்தில் ‘கோச்சடையான்’ படத்தின் தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை வெளியிடுகின்றனர். இவ்விரு விழாக்களிலும் ரஜினியும், படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தீபிகா படுகோனேயும் கலந்து கொள்கிறார்கள்.‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11–ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர். முதல் வாரத்துக்குள் ரூ.50 கோடி வசூல் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

‘கோச்சடையான்’ படத்தில் சரத்குமார், ராணா, ஷோபனா போன்றோரும் நடித்துள்ளனர். இந்திய திரையுலகில் முதல்முறையாக ‘3டி’ மோஷன் கேப்சர் டெக்னாலஜி என்ற நவீன தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. ஹாலிவுட் படங்களான ‘அவதார்’, ‘டின்டின்’ போன்று அனிமேஷன் படமாக இது தயாராகியுள்ளது. தந்தை, மகன் என இரு வேடங்களில் ரஜினி வருகிறார். ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago