விக்ரம் பிரபுவுடன் இணையும் நஸ்ரியா!…

சென்னை:-மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற படம் தமிழில் தலப்பாக்கட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார்.

இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது, நஸ்ரியாவை ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கூறும்போது,இப்படத்தில் நடிக்க முதலில் நஸ்ரியாவிடம் கேட்டபோது, ‘உஸ்தாத் ஹோட்டல்’ மலையாள படத்தில் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால், குறைந்த காட்சிகளே இருந்தாலும் அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவரைவிட நன்றாக நம்மால் நடிக்க முடியுமா? என்ற ஐயம் உள்ளது. அதனால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.ஆனால், நான் மலையாள படத்தைவிட, தமிழ் படத்தில் நாயகிக்கு கூடுதல் காட்சிகள் வரும்படி கதையில் மாற்றம் செய்துள்ளேன். இதில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கு நல்ல ஸ்கோப் உள்ளது என்று கூறியதும் அவர் மனம்மாறி நடிக்க ஒப்புக்கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தை வருகிற மார்ச் 31-ந் தேதி தொடங்கவுள்ளனர். இது ஒரு முஸ்லீம் குடும்பத்தை பற்றிய கதை. ராஜ்கிரண் இப்படத்தில் முஸ்லீம் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.சார்லி, தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பை கோலிக்கோடு, கொச்சி ஆகிய இடங்களில் தொடங்கி, தொடர்ந்து பாண்டிச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் படமாக்க உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago