இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது, நஸ்ரியாவை ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கூறும்போது,இப்படத்தில் நடிக்க முதலில் நஸ்ரியாவிடம் கேட்டபோது, ‘உஸ்தாத் ஹோட்டல்’ மலையாள படத்தில் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால், குறைந்த காட்சிகளே இருந்தாலும் அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவரைவிட நன்றாக நம்மால் நடிக்க முடியுமா? என்ற ஐயம் உள்ளது. அதனால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.ஆனால், நான் மலையாள படத்தைவிட, தமிழ் படத்தில் நாயகிக்கு கூடுதல் காட்சிகள் வரும்படி கதையில் மாற்றம் செய்துள்ளேன். இதில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கு நல்ல ஸ்கோப் உள்ளது என்று கூறியதும் அவர் மனம்மாறி நடிக்க ஒப்புக்கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தை வருகிற மார்ச் 31-ந் தேதி தொடங்கவுள்ளனர். இது ஒரு முஸ்லீம் குடும்பத்தை பற்றிய கதை. ராஜ்கிரண் இப்படத்தில் முஸ்லீம் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.சார்லி, தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பை கோலிக்கோடு, கொச்சி ஆகிய இடங்களில் தொடங்கி, தொடர்ந்து பாண்டிச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் படமாக்க உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே