‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் முடிந்ததும்,லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசனே இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் கமல் இயக்கவில்லை.கமல்ஹாசனின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

ரமேஷ் அரவிந்த் சதிலீலாவதி படத்தின் கன்னட ரீ-மேக் உட்பட பல படங்களை கன்னடத்தில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் ரமேஷ் அரவிந்த்,உத்தம வில்லனை மாறுபட்ட ஒரு படமாக இயக்க திட்டமிட்டிருக்கிறாராம். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். இதற்காக காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.த்ரிஷா ஏற்கெனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் கமலுடன் நடிக்க கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பை தவறவிட மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இதனால் இம்மூவரும் உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பார்கள என்றே கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு கமலுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 24-ஆம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கவிருக்கிறதாம். இந்தப் படம் தவிர கமல்ஹாசன் மலையாள திருசியம் படத்தின் ரீ-மேக்கிலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவகவிருப்பதாக கூறப்படுகிறது.ஆக மொத்தத்தில், இந்த வருடம் கமல்ஹாசன் நடிப்பில் மூன்று படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago