ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர்சோகீனும் ஆதரவு கொடுத்தனர். இதனையடுத்து 38 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னி, முதல்வர் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை சரியாக நிறைவேற்றவில்லை எனக்கூறி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.இந்நிலையில் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த முன்ட்கா தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., முதல்வர் கெஜ்ரிவால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வந்தார். அவரும், வினோத்குமார்பின்னி மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ., சோயிப் இக்பால் ஆகியோரும், மின்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் குறைப்பு, பெண்கள் பாதுகாப்பு போன்ற உறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தவறினால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என கூறி நெருக்கடியை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக ரம்பீர் சோகீன் நேற்று கூறினார். இது தொடர்பாகவும் கவர்னரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் படி, அவர் இன்று டில்லி துணை நிலை கவர்னரை சந்தித்து, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறினார்.இதன் பின்னர் சோகீன் கூறுகையில், முதல்வர் கெஜ்ரிவால், தேர்தலுக்கு முன்னர் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை தீர்ப்போம் என உறுதியளித்தார். ஆனால் முதல்வராக பதவியேற்று இத்தனை நாளாகியும் தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியதால் தான் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக கூறினார். இதனையடுத்து கெஜ்ரிவால் அரசு மைனாரிட்டி அரசாக மாறியது. இதனையடுத்து தற்போது அரசுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் கட்சியின்8 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு எம்.எல்.ஏ., என36 பேரின் ஆதரவு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே