பிரபல இசையமைப்பாளரின் மகன் இஸ்லாம் மதத்தில் இணைந்தாரா!…

சென்னை:- பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா, விரைவில் முஸ்லிம் மதத்தில் இணையவிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் முஸ்லிம் மதத்தில் சேர்ந்து விட்டார் என கடந்த ஒரு வருட காலமாக அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது.

இதனை உறுதி செய்யும் வகையில், யுவன் தனது டுவிட்டரில், ஆம் நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன் என அவரே இன்று உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரும் மாற்றம் பெறும் என தெரிகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில், கூறியிருப்பதாவது:- மீண்டும் 3 வது முறை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை. இது போலியான செய்தி. “ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! (இறைவனுக்கு நன்றி!) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.

சமீப காலமாக யுவன்சங்கர் ராஜா இஸ்லாமில் சேர்ந்து விட்டதாக பேசப்பட்டது. ஆனால் இவர் இது குறித்து எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது டுவிட்டரில் இஸ்லாமில் சேர்ந்ததை உறுதி செய்துள்ளார். இது இவரது தனிப்பட்ட விருப்பம் என்பதால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago