நடிப்பதற்கு போட்டி போடும் அஜீத் மற்றும் விஜய்…

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. இப்படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அவர் கதையை கேட்டு இப்படத்துக்கு அஜீத் பொருத்தமாக இருப்பார் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அஜீத்திடம் ஷங்கர் பேசினார். அவரும் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் ஷங்கர், அஜீத் இருவரும் முதன்முறையாக இணைய உள்ளனர்.

கிரீடம் விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்த விஜய் அடுத்து நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து மீண்டும் துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கடந்த வாரம் இதன் ஷூட்டிங் கொல்கத்தாவில் தொடங்கியது.

சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். அனிரூத் இசை அமைக்கிறார். இப்படத்துக்காக விஜய் சொந்த குரலில் பாடிய ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஷங்கர், முருகதாஸ் என டாப் இயக்குனர்கள் படத்தில் நடிக்க அஜீத், விஜய் தயாராகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago