இத்தனை ஆண்டுகள் புகைந்துகொண்டிருந்த இந்த மோதல் ஒரு விழாவில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது நட்பாக மாறிவிட்டது. இப்போது த்ரிஷாவை ஓவர்டேக் செய்துகொண்டு நயன்தாரா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இருந்தாலும் இவர்கள் நட்பு தொடர்கிறது. இது பற்றி இருவருமே மனம் திறந்து பேசியுள்ளனர்.இது பற்றி நயன்தாரா கூறியது: எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நானும் த்ரிஷாவும் சந்தித்து பேசுவோம். இப்போது எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஆரம்ப கட்டத்தில் சில காரணங்களால் எங்களுக்குள் மோதல் இருந்தது உண்மைதான். அப்போது நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்தோம். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் சினிமாவில் போட்டி நிலவியது. இப்போது நாங்கள் பக்குவம் அடைந்திருக்கிறோம். இருவருமே அவரவர்க்கு என தனி இடம் பிடித்திருக்கிறோம்.
விழா ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்தபோதுதான் நாங்கள் தோழிகள் ஆனோம். இருவருமே சினிமாவைப்பற்றி பேசிக்கொள்ள மாட்டோம். நிறைய நடிகைகள் வருகிறார்கள், போகிறார்கள் ஆனால் தனது இடத்தை த்ரிஷா தக்க வைத்திருக்கிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார் நயன்தாரா.அவரைப்பற்றி த்ரிஷா கூறும்போது, நீண்ட காலமாக நாங்கள் எதிரிகள், போட்டியாளர்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி இல்லை. சிலர்தான் எங்களுக்குள் இந்த மோதலை உருவாக்கி வந்தனர். அது நீடிக்கவில்லை. இப்போது நாங்கள் நல்ல தோழிகள். அவர் வெளியூரில் இருந்தாலும் அவ்வப்போது செல்போனில் பேசுவேன். என் படம் ரிலீஸ் ஆகும்போது முதலில் அவர்தான் வாழ்த்து சொல்வார். விமர்சனமும் செய்வார். ஒரு தோழியாக அவர் உண்மையானவர். நடிப்பை விட்டு விலகிய முடிவை அவர் கைவிட்டது எனக்கு சந்தோஷம் அளித்தது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே