பி.ஏ.பாஸ் திரை விமர்சனம்…

முகேஷ் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அவன் படித்து கொண்டிருக்கும்போதே அவனது தாய் தந்தையர் சாலை விபத்தில் இறந்துவிடுகின்றனர். இதனால் அவனது தாத்தாவின் நிர்பந்தம் காரணமாக முகேஷ் தனது அத்தை வீட்டில் தங்கி அவர்களது வீட்டு வேலைகளை செய்து கல்லூரி படிப்பை தொடருகிறான். அவன் கல்லூரிக்கு சென்ற நேரம் போக மீதி நேரங்களில், அத்தை வீட்டிற்கு அருகே உள்ள கல்லறையில் வேலை செய்து வரும் ஜானியுடன் செஸ் விளையாடி பொழுதை கழிக்கிறான். அவனிடம் தனது தங்கைகளின் எதிர்காலம் பற்றியும் அடிக்கடி முகேஷ் புலம்பி வருகிறான்.

இவ்வாறு அத்தை வீட்டில் அவன் வசித்து வரும் சூழலில் ஒருமுறை மகளிர் அணி குழுவை சேர்ந்தவர்கள் அவனது அத்தையை பார்க்க வருகிறார்கள். இக்குழுவினருக்கு முகேஷ் டீ வழங்கும்போது தன்னை விட மூத்தவளும் திருமணமானவளுமான நாயகி சரிகாவை சந்திக்கிறான். அப்போது வீட்டு வேலை செய்வது குறித்து அவனை மகளிர் குழுவினர் கேலி கிண்டல் செய்கின்றனர்.

ஒரு நாள் அவனது அத்தை முகேஷிடம் சரிகாவின் வீட்டுக்கு சென்று அவளிடம் உள்ள ஆப்பிள் பையை வாங்கி வருமாறு கூறுகிறார். முதலில் செல்ல மறுக்கும் முகேஷ் இரு நாட்கள் கழித்து சரிகாவின் வீட்டுக்கு செல்கிறான். அப்போது தன்னை விட மிக இளமையாகவும், கட்டான உடல் வாகும் கொண்டவனான முகேஷை அடையும் நோக்கில் சரிகா உடை மற்றும் உடல் ரீதியாக அவனை மயக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாள். ஒரு கட்டத்தில் அப்பாவியும், கூச்ச சுபாவமும் கொண்டவனான முகேஷ் அவளுடன் கலவியில் ஈடுபட்டுவிடுகிறான். பின்னர் சரிகா தனது வீட்டுக்கு தொடர்ந்து அவனை அழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வருகிறார். அவ்வாறு உல்லாசத்தில் ஈடுபடுவதற்காக அவனுக்கு பணத்தையும் தருகிறாள். முதலில் பணத்தை வாங்க மறுக்கும் அவன் பின்னர் அதை வாங்கிக்கொள்கிறான்.

இந்நிலையில் அவனது தாத்தா இறந்துவிட்டதாக அவனுக்கு தகவல் வருகிறது. உடனே அவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்று அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த பின் தனது தங்கைகளை அழைத்து சென்று காப்பகத்தில் சேர்க்கிறான். தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அவனுக்கு ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு பணம் அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் சரிகா தன்னை போல் உல்லாசத்திற்கு ஏங்கும் பெண்களுக்கு அவனை அறிமுகப்படுத்தி ஆண் விபச்சாரியாகவே மாற்றி விடுகிறாள். அவனது கைக்கும் ஏராளமான பணம் கிடைக்கிறது. தனக்கு கிடைத்து வரும் பணத்தை அவன் சரிகாவிடமே கொடுத்து சேமித்து வருகிறான். அவ்வாறு அவனது பணத்தை சேமித்து வைக்க, தன்னுடன் கலவியில் ஈடுபடவேண்டும் என சரிகா கூறுகிறாள். அதை ஏற்று அவனும் அவளை திருப்திபடுத்துகிறான். இந்த நிலையில் ஒருநாள் இருவரும் கலவியில் ஈடுபடும்போது சரிகாவின் கணவர் அவர்களை பார்த்துவிடுகிறார். அவர் கோபமடைந்து இருவரையும் அடித்து துவைத்ததோடு மட்டுமல்லாமல் அவனது அத்தையிடமும் அவர்களது செயல்கள் பற்றி கூறிவிடுகிறார்.

இதனால் கோபமடைந்த அத்தை அவனை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். வீட்டிலிருந்து துரத்தப்படும் அவனை ஜானி தன்னுடன் தங்கிகொள்ள அனுமதிக்கின்றான். ஆனால் மறுபடியும் பணத்தேவை அவனுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சரிகாவை தேடிப்போகின்றான், ஆனால் அவள் தனது கணவருக்கு இருவரின் விஷயமும் தெரிந்துவிட்டதால் இனி தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறாள். மற்ற பெண்களை அவன் அணுகும்போது அவர்களும் அவனை தவிர்த்து விடுகின்றனர். கடுமையான பண நெருக்கடியில் சிக்கிய அவன் தான் ஏற்கனவே சரிகாவிடம் கொடுத்து வைத்துள்ள பணத்தை கேட்கும்போது அவள் அதைதர மறுத்து ஏமாற்றிவிடுகிறாள்.

அவனுக்கு அவனது பணம் கிடைத்ததா, தன்னை ஏமாற்றிய சரிகாவை பழிவாங்கினானா என்பதே மீதிக்கதை. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ஷதாப் கமல் அருமையாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஷில்பா சுக்லாவும் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கதைக்கு தேவையான ஆபாசமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். எந்த வித சினிமாத்தனமுமின்றி யதார்த்தமான வாழ்க்கையை படமாக்கிய இயக்குனர் அஜய் பாஹ்லை வெகுவாக பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘பி.ஏ பாஸ்’ யதார்த்தமான வாழ்க்கை பதிப்பு…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago