5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ஷிகார் தவான் இந்தப்போட்டியில் இடம் பிடித்தார். ஸ்டூவர்ட் பின்னி கழற்றிவிடப்பட்டார். கடந்த போட்டிகளைப் போன்று இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் டோனி டாஸ் வென்றார்.இந்த முறை அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக குப்தில், ஜேசி ரைடர் களம் இறங்கினர். ரைடர் 17 ரன்னில் புவனேஸ்வர்குமார் பந்தில் அவுட் ஆனார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை வருண் ஆரோன் கைப்பற்றினார். அதன்பின் வில்லியம்சன்– டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஒன்று, இரண்டு என்று ரன்களை சேர்த்த அவர்கள் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் விரட்டினர். இருவரும் தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.
இந்த ஜோடியை வருண் ஆரோன் பிரித்தார். அவரது பந்தில் வில்லியம்சன் அவுட் ஆனார். அவர் 88 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இந்த ஜோடி 3–வது விக்கெட்டுக்கு 152 ரன் (25.1 ஓவர்) சேர்த்தது. அப்போது நியூசிலாந்து 193 ரன் எடுத்து இருந்தது. அதன்பின் ரோஸ் டெய்லருடன் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் ஜோடி சேர்ந்தார். மெக்குல்லம் 23 ரன் எடுத்திருந்தபோது கோலி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய ரோஸ் டெய்லர் சதம் அடித்தார். கடந்த 4–வது போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார். இது அவருக்கு 10–வது சதமாகும்.ரோஸ் டெய்லர் 102 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 274 ரன்னாக இருந்தது. அதன்பின் ரோஞ்ச், நீசம் ஜோடி அதிரடியாக விளையாடியது. கடைசி 2 ஓவரில் 29 ரன் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது.
304 என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி துவக்கம் முதலே தடுமாறியது. ரோகித் சர்மா 4 ரன்களிலும், ஷிகர் தவான் 9 ரன்களிலும், ரகானே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 30 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு விராட் கோலி நம்பிக்கை அளித்தார். அதிரடியாக ஆடிய அவர் 78 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 82 ரன்கள் விளாசினார். விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்த நிதானமாக ஆடிய கேப்டன் டோனி தனது பங்கிற்கு 47 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் எதிர்பார்த்த ஸ்கோரை எட்டவில்லை. இதனால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 216 ரன்களில் சுருண்டது.நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், மில்ஸ், வில்லியம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
NZ Inning
Batsman R B M 4s 6s S/R
Guptil M. c Shami M. b Aaron V. 16 35 53 2 0 45.71
Ryder J. c Rahane A. b Kumar B. 17 26 32 1 1 65.38
Williamson K. c Rahane A. b Aaron V. 88 91 118 8 1 96.70
Taylor R. c Dhawan S. b Shami M. 102 106 149 10 1 96.23
McCullum B. c Sharma R. b Kohli V. 23 18 29 1 1 127.78
Neesham J. not out 34 19 32 3 2 178.95
Ronchi L. not out 11 5 10 2 0 220.00
Extras: (w 5, b 1, lb 6) 12
Total: (50 overs) 303 (6.1 runs per over)
Bowler O M R W E/R
Shami M. 10 3 61 1 6.35
Kumar B. 8 0 48 1 6.32
Aaron V. 9.4 0 60 2 6.38
Ashwin R. 6 0 37 0 6.61
Jadeja R. 9 0 54 0 6.28
Kohli V. 6.6 0 36 1 5.45
IND Inning
Batsman R B M 4s 6s S/R
Shami M. not out 14 15 29 0 1 93.33
Kumar B. c Ronchi L. b Henry M. 20 25 32 1 0 80.00
Aaron V. b Neesham J. 0 1 4 0 0 0
Ashwin R. b Williamson K. 7 11 10 1 0 63.64
Jadeja R. c & b Mills K. 5 6 3 1 0 83.33
Kohli V.c Young-Husband P. b McCullum N. 82 78 132 7 3 105.13
Sharma R. c Taylor R. b Mills K. 4 13 20 0 0 30.77
Dhawan S. c McCullum N. b Henry M. 9 28 43 1 0 32.14
Rahane A. lbw Henry M. 2 10 17 0 0 20.00
Rayudu A. c Williamson K. b Henry M. 20 40 42 2 0 50.00
Dhoni M. c Neesham J. b Williamson K. 47 72 76 3 0 65.28
Extras: (w 4, nb 1, lb 1) 6
Total: (49.4 overs) 216 (4.3 runs per over)
Bowler O M R W E/R
Williamson K. 4.1 0 19 2 4.63
Neesham J. 5.4 0 45 1 8.33
Mills K. 9.6 1 35 2 3.65
McClenaghan M. 10.1 0 45 0 4.46
Henry M. 9.6 1 38 4 3.96
McCullum N. 8.2 1 33 1 4.02
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே