3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக நடைபெற்று வந்த ‘மோனோ ரெயில்’ சேவைக்கான முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் 8.9 கிலோ மீட்டர் தூரமுள்ள வதாலா-செம்பூர் நிலையங்களுக்கு இடையிலான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 6 ரெயில் சேவைகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரெயிலில் தற்போது 4 பெட்டிகள் மட்டும் இணைக்கப்படுகிறது.
இந்த மோனோ ரெயில்கள் முதல் கட்டமாக வதாலா-செம்பூர் இடையே 7 நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த பயண தூரத்துக்கான கட்டணமாக ரூ. 5 முதல் 11 வரை வசூலிக்கப்படுகிறது. இதற்கான ‘ஸ்மார்ட் கார்ட்’ மற்றும் டோக்கன்கள் அனைத்து மோனோ ரெயில் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.மும்பை அருகேயுள்ள செம்பூரில் இன்று நடைபெறும் விழாவில் மகாராஷ்டிர முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் முதல்கட்ட மோனோ ரெயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார். நாளை முதல் மும்பைவாசிகள் இந்த ரெயில்களில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயண தூரத்தை 20 கிலோ மீட்டராக நீட்டிக்கும் பணிகள் அடுத்த (2015) ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில் சேவைகள் 16 ஆக உயர்த்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே