மீண்டும் ‘சைக்கோ’வாகும் தனுஷ்…

சென்னை:-ரொமான்டிக் கதைகளோ, ஆக்சன் கதைகளோ எதுவானாலும் அதற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு நடிப்பதில் கைதேர்ந்தவர் தனுஷ். அதனால்தான் ராஞ்சனா இந்தி படத்தில் அவர் நடிக்க சென்றபோது அவரை ஒரு மார்க்கமாக பார்த்த மும்பைவாலாக்கள், பின்னர் படம் வெளியானபோது அந்த ஒல்லிகுச்சி நடிகரா இப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக பார்த்தனர். அந்த அளவுக்கு தன்னிடமுள்ள மைனஸைகூட ப்ளசாக வெளிப்படுத்திக் காட்டக்கூடியவர் தனுஷ்.

இந்நிலையில், கன்னடத்தில் லுசியா என்ற சைக்கோவை மையமாகக்கொண்ட படத்தை இயக்கிய பவன்குமார் என்பவர், அந்த படத்தை அடுத்து தமிழிலும் ரீமேக் செய்யப்போகிறராம். அதற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று இங்குள்ள நடிகர்களை அலசியபோது, தனுஷ் மட்டுமே கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பவன்குமார்.தனுஷ் சைக்கோவாக நடித்த காதல் கொண்டேன், மயக்கம் என்ன உள்ளிட்ட சில படங்களைப்பார்த்தபோது இந்த முடிவுக்கு வந்துள்ள அவர், இந்த படத்தில் ஒரு சைக்கோ அடுக்கடுக்கான கொலைகளை செய்வது போல் கதை பின்னப்பட்டுள்ளது.

அதில் தனுஷ் நடித்தால் மிக தத்ரூபமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் சினிமாவில் இந்த வேடத்துக்கு தனுஷை தவிர வெறு எந்த ஹீரோவும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago