59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. முன்னணி நட்சத்திரமான ‘தீபிகா படுகோனே‘, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், சிறந்த நடிகராக பர்கான் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக் மில்கா பாக் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த படமாக ‘பாக் மில்கா பாக்‘ படம் தேர்வு பெற்றுள்ளது. சிறந்த அறிமுக நாயகனாக தமிழ் நடிகர் ‘தனுஷ்‘ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘ராஞ்சனா‘ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
பிலிம்பேர் விருதுகள் வருமாறு:
சிறந்த நடிகர்- பர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்)
சிறந்த நடிகை- தீபிகா படுகோனே (ராம் லீலா)
சிறந்த இயக்குனர்- ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)
சிறந்த படம் – பாக் மில்கா பாக்
சிறந்த அறிமுக இயக்குனர் – ரித்தேஷ் பத்ரா (தி லஞ்ச்பாக்ஸ்)
சிறந்த அறிமுக நாயகன் – தனுஷ் (ராஞ்சனா)
சிறந்த அறிமுக நாயகி – வாணி கபூர் (ஷுத்த தேசி ரொமான்ஸ்)
சிறந்த கதை-சுபாஷ் கபூர் (ஜோலி எல்எல்பி)
வாழ்நாள் சாதனையாளர் விருது – தனுஜா
சிறந்த இசை – ஜீத் கங்குலி, மிதூன் மற்றும் அங்கிட் திவாரி (ஆஷிக்கி-2)
சிறந்த பாடல் – பிரசூன் ஜோஷி (ஜிந்தா)
சிறந்த பின்னணி பாடகர் – ஆரிஜித் சிங் (தும் ஹி ஹோ, ஆஷிக்கி)
சிறந்த பின்னணி பாடகி – மோனாலி தாக்கூர் (சவார் லூன், லூத்தேரா)
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே