இதன் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹீரோ மோகன்லாலைத் தவிர படத்தின் இயக்குநர் மேஜர் ரவி, அதே படத்தில் நடித்த நடிகை சோனா, டைரக்டரும் நடிகருமான ரவிமரியா, தயாரிப்பாளர் வி.எஸ்.நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விழாவில் நடிகை சோனா பேசியதாவது :
என்னோடா 10 வருஷ சினிமா வாழ்க்கையில தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு எல்லா தென்னிந்திய மொழிகளிலும் இருக்கிற அந்தந்த ஊர் சூப்பர் ஸ்டார்களோட நடிச்சிட்டேன். ஆனா மோகன்லால் சாரோட மட்டும் எந்த படத்திலும் நடிக்கல. இதை நெனைச்சி நான் பல நாட்கள் பொழம்பிக்கிட்டே இருந்தேன்.அந்த நேரத்துல தான் மேஜர் ரவி சார் என்னைக் கூப்பிட்டு இந்தப் படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்தார்.ஆளு பார்க்கிறதுக்குத்தான் ரொம்ப டீசண்ட்டா இருக்காரு… ஆனா ரொம்ப பயங்கர மோசமான ஆளு… கூட்டிட்டுப் போன முதல்நாளே என்னை மிரட்டினாரு… முதல்நாள் தான் அப்படி இருந்துச்சு. அப்புறம் ரெண்டாவது நாள்லேயிருந்து அது செட்டாயிடுச்சு.
மோகன்லால் சார்கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம். ஒரு படத்துல கமல் சாரோட நடிக்கும் போது அவரோட கண்களை என்னால பார்க்க முடியல. அந்தளவுக்கு அவரோட கண்ணு பவர்ஃபுல்லா இருந்தது, அதேமாதிரி தான் மோகன்லால் சாரோட கண்களையும் என்னால நேருக்கு நேர் பார்க்க முடியல. இந்த படத்துல நடிச்சதும் எனக்கு சந்தோஷமாகவும், நல்ல எக்ஸ்பீரியன்ஸாகவும் இருந்தது என்றார் சோனா.
இதைக்கேட்ட டைரக்டர் மேஜர்ரவியோ ஆமாம், சோனா சொன்ன மாதிரி நான் ரொம்ப மோசமான ஆளு தான். நீ உன்னோட இஷ்டத்துக்கு 10 மணி வரைக்கும் தூங்கிட்டு 12 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னேன். அதுல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். அதனால தான் என்னை ரொம்ப மோசமான ஆளுன்னு சொல்றாங்க.என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே