செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ‘வீரம்’ முதலிடம்…

இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ‘வீரம்’ முதலிடம்…

இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ‘வீரம்’ முதலிடம்… post thumbnail image
சென்னை:- பாக்ஸ் ஆபிஸில் கடந்த வார நிலவரப்படி பி‌ரியாணி ஐந்தாவது இடத்தையும், இவன் வேற மாதி‌ரி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

3. என்றென்றும் புன்னகை:-
மூன்றாவது இடத்தில் என்றென்றும் புன்னகை பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 1.9 லட்சங்களையும். வார நாட்களில் ஏறக்குறைய ஒரு கோடியையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 6.5 கோடிகள்.

2. ‌ஜில்லா:-
உலக அளவிலும், தமிழக அளவிலும் ‌ஜில்லாவின் திரையரங்கு எண்ணிக்கைதான் அதிகம். என்றாலும் சென்னையில் ‌ஜில்லாவுக்கு இரண்டாவது இடம்தான். முதல் மூன்று தினங்களில் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறில் 714 தியேட்டர்களில் 2.72 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. வீரம்:-
சென்னையில் வீரத்துக்கு முதலிடம். ‌ஜில்லா 714 தியேட்டர்கள் என்றால் வீரத்துக்கு 741 தியேட்டர்கள். இந்த எல்லா தியேட்டர்களிலும் முதல் மூன்று தினங்களில் 3.04 கோடிகளை படம் வசூலித்துள்ளது. விமர்சனங்களும் ‌ஜில்லாவைவிட வீரத்துக்கு சாதகம் என்பதால் இந்த வார இறுதியிலும் வீரமே முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி