அதுவரை 4, 5, 6 வது இடங்களில் களமிறங்கி வந்த சச்சின். முதன் முறையாக இப்போட்டியில் துவக்க வீரராக இறக்கப்பட்டார். இது இவரது ௭௦வது ஒருநாள் போட்டி. இதில் 49 பந்தில் 82 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்கு பின் துவக்க வீரராக பல்வேறு சாதனைகள் படைத்தார்.இப்போது இந்திய அணிக்கு மீண்டும் துவக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காம்பிர், சேவக்கிற்கு மாற்றாக வந்தது ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி.இதில் ரோகித் சர்மா சமீப காலமாக ஏமாற்றுகிறார். தென் ஆப்ரிக்க மண்ணில், ஸ்டைனின் 17 பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தற்போது நேப்பியரில் நடந்த முதல் போட்டியில், 23 பந்தில் 3 ரன்கள் தான் எடுத்தார்.இதனால், சச்சினை போல விராத் கோஹ்லியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோஹ்லி கடந்த 2008, ஆக., 18ல் இலங்கைக்கு எதிராக அறிமுகமானது போது, துவக்க வீரராகத்தான் வந்தார். முதல் 5 போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட, மொத்தம் 149 ரன்கள் எடுத்தார். பின், பேட்டிங்கில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட கோஹ்லி, தற்போது 3வது வீரராக வருகிறார். இவருக்கு மீண்டும் துவக்க வீரராக வாய்ப்பு தந்தால், முழுமையாக 50 ஓவர்களும், பேட்டிங்கில் நீடிக்கலாம். சச்சினைப் போல எண்ணற்ற சாதனைகள் படைக்கலாம்.
இதேபோல, ‘மிடில் ஆர்டரில்’ ரெய்னா, அணியை கைவிடுகிறார். கடந்த 2005ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரெய்னா, இதுவரை 187 போட்டிகளில் 4,530 ரன்கள் (3 சதம், 29 அரைசதம்) எடுத்துள்ளார்.ஆனால், கடைசியாக பங்கேற்ற 25 போட்டிகளில், ஒருமுறை மட்டும் தான் அரைசதம் (65 ரன்கள்) அடித்தார். மற்றபடி மொத்தம் 463 ரன்கள் தான் எடுத்துள்ளார். ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளில் அவுட்டாவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் புஜாராவை அணியில் சேர்த்தால் நல்லது.
உலக கோப்பை துவங்க இன்னும் ஒரு ஆண்டு (2015) மட்டும் உள்ள நிலையில், அணியில் தேவையான மாற்றங்களை செய்து சோதித்து பார்க்க இதுவே சரியான தருணம் என்பதை கேப்டன் தோனி உணர வேண்டும்.தோனியின் ஆசியுடன் அணியில் தொடரும் ரவிந்திர ஜடேஜா, கடைசியாக பங்கேற்ற 18 போட்டிகளில் 20 விக்கெட்டு தான் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் நிலைமை இன்னும் மோசம். கடைசியாக களமிறங்கிய 8 போட்டிகளில் 80 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். வந்தவேகத்தில் வெளியேறும் இவருக்கு பதிலாக ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்லது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே