இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். பல்வேறு பிரிவுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ள படங்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பெயர்களை சமீபத்தில் பிலிம்பேர் அறிவித்தது.
சிறந்த படம்:-
சிறந்த படம் வரிசையில், சென்னை எக்ஸ்பிரஸ், ராஞ்சனா, பாக் மில்கா பாக், யே ஜவானி ஹை தீவானி மற்றும் ராம் லீலா ஆகிய 5 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 3 படங்களில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் தனுஷ்:-
சிறந்த இயக்குனர்கள் விருதுக்கான வரிசையில், ஆனந்த் எல். ராய், ரோஹித் ஷெட்டி மற்றும் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். சிறந்த நடிகர் வரிசையில் ராஞ்சனா படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. சிறந்த நடிகர் விருதுக்கான வரிசையில் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், ரன்பீர் கபூர் மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோர் நடிகர் தனுஷ் உடன் போட்டியில் உள்ளனர்.
சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கான வரிசையில் ராஞ்சனா படத்தில் இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, சிறந்த நடிகைக்கான விருது வரிசையில் தீபிகா படுகோனே (2 பரிந்துரைகள்), பரிநீதி சோப்ரா, ஷ்ரத்தா கபூர், சோனாக்ஷி சின்கா மற்றும் சோனம் கபூர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே