கெளதம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்-லட்சுமிமேனன்…

சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் விக்ரம்பிரபுவைத் தொடர்ந்து, சசிகுமார், விஷால், சித்தார்த் ஆகியோருடன் நடித்தவர் இப்போது விமல், கடல் கெளதம் உள்பட மேலும் சில ஹீரோக்களுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவரிடத்தில், இந்த படங்களின் ஹீரோக்களுடன் நடித்த அனுபவத்தைப்பற்றிக் கேட்டால், நான் நடித்த எல்லா படங்களிலுமே ஹீரோக்கள் என்னைவிட அதிக வயதானவர்கள். அதனால் யாரையும் எனக்கு பிடித்தமானவர்கள் என்று சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைத்ததால் அவர்களுடன் நடித்தேன். அப்போது பேசிப்பழகினேன் அவ்வளவுதான் என்கிறார்.ஆனால், அப்படி நான் நடித்தவர்களில் பிடித்தமான ஹீரோ ஒரேயொருவர் மட்டுமே இருக்கிறார். அவர்தான் கடல் கெளதம். நாங்கள் இருவரும் சிப்பாய் படத்தில் நடித்திருக்கிறோம். கெளதமும் என்னைப்போலவே டீன்ஏஜ் பையன். அதனால், நாங்கள் ரொம்ப ஜாலியாக பேசிக்கொள்வோம். அதிக நேரம் மனம் விட்டு பேசுவோம். அதனால் நான் நடித்த ஹீரோக்களில் கெளதமுடன் மட்டும்தான் நெருங்கி பழகியிருக்கிறேன்.

மேலும், நாங்கள் வெவ்வேறு படங்களில் நடித்துகொண்டிருந்தபோதும், அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். அந்தவகையில், நான் பழகியது வரைக்கும் கெளதம் ரொம்ப நல்ல நடிகர். பெரிய நடிகரின் மகன் என்கிற ஈகோ இல்லாதவர். இயல்பாக பழகக்கூடியவர். அவருடன் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்படி கெளதமைப்பற்றி கலகலப்பாக எடுத்து விடுகிறார் லட்சுமிமேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago