தமன்னாவை கவர்ந்த அஜித்…

சென்னை:-‘வீரம்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்த பேட்டி விவரம் வருமாறு:–நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். வீரம் படத்தில் என் கேரக்டர் மிகவும் பிடித்தது. சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். வீரம் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார்.

சிறு நகரத்தில் வசிக்கும் தமிழ் கலாசார பெண் வேடமாக இருந்தது. தமிழ் ரசிகர்களை எளிதாக கவரக்கூடிய வேடம். இதில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கமர்ஷியல் படமாக வந்துள்ளது.இப்படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவங்களை மறக்க முடியாது. அவர் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். சினிமாவில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
வீரம்’ தலைப்பு அவருக்கு மிகவும் பொருத்தமானது. அவர் மிகவும் தைரியமானவர். தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அழகானது. படப்பிடிப்புக்கு வரும்போது லைட்பாய் முதற்கொண்டு அவரது ஊழியர்கள் என் ஊழியர்கள் எல்லோரிடமும் பாகுபாடு இன்றி சமமாக மதிப்பு கொடுத்து பேசுவார்.

எனக்கு இந்தப் படத்தில் வலுவான வேடம். தமிழ், தெலுங்கில் ரிலீசாகிறது. இந்திப் படங்களிலும் நடிக்கிறேன். தென் இந்திய மொழி படங்களில் நடிக்கவே எனக்கு அதிக விருப்பம் உள்ளது. தமிழில் எனக்கு பிடித்த படம் ‘பையா.’ தெலுங்கில் ‘100 சதவீதம் லவ்’ அண்ணன் தம்பியான சூர்யா, கார்த்தியுடன் நடித்து விட்டேன். இருவருமே கேரக்டர் மற்றும் வேலைகளில் வித்தியாசமானவர்கள்.நான் தனியாகத்தான் இருக்கிறேன். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டு இருக்கிறது. சரியான நேரத்தில் எனக்கு பொருத்தமானவரை சந்திப்பேன். அது நடக்கும்போது எல்லோருக்கும் தெரிய வரும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago