ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார். நயன்தாரா, டாப்சியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து காதல் வலையில் வீழ்த்துவதாக செய்திகள் பரவின. ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷாலும் இதனை உறுதிபடுத்தினார்.இந்நிலையில் ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் 100–வது நாள் வெற்றி விழாவுக்கு கமலஹாசனை அழைத்து இருந்தனர்.
இந்த விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசும்போது, காதல் இளவரசன் பட்டத்தை பல வருடங்களாக நான்தான் வைத்து இருந்தேன். அதை நான் ஆர்யாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆர்யாதான் அடுத்த ‘காதல் இளவரசன்’ என்றார். இதை கேட்டு கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது.
ஆர்யாவுக்கு கமல் காதல் இளவரசன் பட்டத்தை சூட்டியதை வரவேற்கிறோம் என்றார் படத்தின் இயக்குனர் அட்லி. நடிகர்கள் பலர் தங்கள் பெயர்களுக்கு பின்னால் பட்டங்கள் வைத்துள்ளனர். ஆர்யா மட்டும் இதுவரை எந்த பட்டத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இனிமேல் அவரது ரசிகர்கள் கமல் வைத்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தை சூட்டி அழைக்க தயாராகி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே