ஆனால், தங்களுக்கு கணக்கு இல்லாத வங்கி ஏ.டி.எம்.களில் அவர்கள் பணம் எடுத்தால், ஒரு மாதத்தில் 5 முறைதான் கட்டணம் இன்றி எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால், ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் காவலாளி நியமனம் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிப்பதற்காக கணக்கு வைத்திருக்கும் வங்கி உள்பட அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய வங்கிகள் சம்மேளனம் பரிசீலித்து வருகிறது. இதற்கான அனுமதி வழங்கும்படி ரிசர்வ் வங்கிக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.இந்த கோரிக்கை பற்றி ரிசர்வ் வங்கி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இந்த கோரிக்கை பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கியின் மூத்த துணை கவர்னர் கே.சி.சக்கரவர்த்தி, இதுபோன்ற சேவைகளுக்கு நியாயமான கட்டணம் வசூலித்தால் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.
“வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியது உள்ளது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். இலவச பணபரிவர்த்தனைக்கு கூட ஒரு முறைக்கு ரூ.15-ம் வரியும் செலுத்த வேண்டியது உள்ளது. இந்த நிலையில் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வங்கிகளுக்கு வேறு வழி இல்லை” என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே