கீரைகள்
நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும் உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
“முருங்கைக்கீரை முட்ட வாயு, ஆத்திக்கீரை அண்ட வாயு” என்று கூறி சிலர் கீரைகளை உணவாக சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.. ‘வாயு’ என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.
புரோட்டீன் சத்துள்ள பழங்கள்
மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.
கால்சியம் சத்துள்ள பழங்கள்
எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.
இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்
ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற ‘அயர்ன்’ என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .
பொட்டாசியம் சத்து
ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.
பாஸ்பரஸ் சத்துள்ளபழங்கள்
மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும் அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன . மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன.மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே