அஜீத் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், விக்ரம் நடித்த ஜெமினி, கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ், மாதவன் நடித்த ஜேஜே உள்பட பல படங்களை இயக்கியவர் சரண். கடைசியாக அஜீத் நடித்த அசல் படத்திற்கு பிறகு எந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. அப்படத்தின் அதிர்ச்சி தோல்வி காரணமாக அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த சரண், இப்போது மீண்டும் இயக்கயுள்ளார் .
தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜூடன் இணைந்து வினய்யை நாயகனாக வைத்து தற்போது புதிய பட வேலைகளில் இறங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகைகள் யாரையும் அணுகாமல், சுவாசிகா, சாமுத்ரிகா, கேஷா என மூன்று புதுமுக நடிகைகளை இறக்குமதி செய்கிறார் சரண்.
இப்படமும் எனது வழக்கமான பாணியில் காதலை மையப்படுத்தியே உருவாகிறது என்று சொல்லும் சரண், ஜேஜே படத்தில் ஒரு ரூபாய் நோட்டில் காதலை சொன்னபோது போல் இப்படத்தில் இன்னொரு புதிய கோணத்தில் காதலை சொல்கிறாராம். இன்றைய யூத் ரசிகர்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்று சொல்லும் சரண், தனது படங்களில் எப்போதுமே பாடல்கள் ஸ்பெசல் என்பதால், டியூன் போடுவதற்காக பரத்வாஜையும் படப்பிடிப்பு நடைபெறும் தளத்துக்கே அழைத்துச்செல்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே