பல ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது தலையார் அருவியில் மட்டும் தண்ணீர் அளவுக்அதிகமாக விழுந்துள்ளது.
தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ளது தலையார் அருவி. தென்னிந்தியாவிலேயே உயரமான அருவி இந்த அருவிதான். இந்த அருவியின் உயரம் 297 மீட்டர் ஆகும். இந்தியாவில் மூன்றாவது உயரமான அருவியும் இந்த அருவிதான். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு எலிவால் போன்ற தோற்றம் உடையதால் இதனை எலிவால் அருவி என அழைப்பார்கள்.
தேவதானப்பட்டியிலிருந்து மஞ்சளார் அணைப்பகுதி பகுதி வழியாக சுமார் 10 கி.மீ. நடந்து சென்றால் இந்த அருவியினை அடையலாம். இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருவியில் தண்ணீர் விழும் இடத்தை பார்க்க இயலாது.
அருவிக்கு செல்லும்போது 4 கி.மீ. தூரத்திலேயே சுற்றுலா பயணிகளை அதன் சாரல் நனைத்துவிடும். இங்குள்ள அம்மா மெச்சு என அழைக்கப்படும் இடத்தில் அருள்மிகு ஸ்ரீ மூங்கிலனை காமாட்சியம்மன் பாதம் பட்டதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதன் அருகில் தலையார் பாவா என்ற முஸ்லிம் மதத்தைச்சேர்ந்த சபிகளின் கல்லறையும் உள்ளது.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் காட்ரோட்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் டம்டம் பாறை என்ற இடத்தில் இருந்து இந்த அருவியை ரசித்து மகிழ்வார்கள். இந்த அருவிக்கு தலையார், மூலையார், வறட்டார் போன்ற ஆறுகள் இணைந்து மஞ்சள் ஆறாக வருகிறது. இந்த ஆற்றை வழிமறித்து அணை கட்டியுள்ளார்கள். அந்த அணை மஞ்சளார் அணை என அழைக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே