இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. தூதரக அதிகாரிகள் வைத்திருந்த அடையாள அட்டைகள் திரும்ப பெறப்பட்டன. இனிமேல் தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தார். ஆனால் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது தேவயானி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் மறு ஆய்வு செய்யும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நீதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவை தேவயானி விவகாரத்தில் மறு ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேவயானி விவகாரத்தை கையாண்டதில் தவறு உள்ளது எனவும் அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை விரைவில் தீர்வு காண்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவை முக்கியமான நாடாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கருதுகிறது. இந்தியாவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் அந்நாடு செய்து வருகிறது. இந்த நிலையில், தேவயானி விவகாரத்தில் இந்தியா கோபமடைந்திருப்பதை அந்நாடு விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே