இந்த வயதில் ஏற்படும் சுரப்பிகளின் மாற்றங்களால் பெண்களின் தோலில் பல்வேறு மாற்றங்களை காண முடிகிறது. சருமம் சம்மந்தமான எந்த வித பிரச்சனைகளையும் பெண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வயதிற்கு வரும் போதும் சருமத்தில் இத்தகைய மாற்றங்களை காண முடியும்.
பருக்கள் கரும் புள்ளிகள் ஆகியவை வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் இந்த பருவத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. குளிர் காலத்தில் நமது தோலின் தன்மை கடினமாகி விடும். இந்த காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் வெளிப்படையாக தெரியும். ஆகையால் குளிர் காலத்தில் சருமத்தை மிக முக்கியமாக பராமரிப்பது அவசியமாகும். அழகான பருக்கள் இல்லாத மென்மையாக சருமத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். குளிர் காலத்திற்கென்று இருக்கும் தனிப்பட்ட சரும பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் தோலில் அற்புதம் செய்யும். டீன் ஏஜ் பெண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள் இதோ
தோலை தூய்மைப்படுத்துல் இந்த செயல் தான் மிகவும் முக்கியம்.சரும பராமரிப்பில் இது முதல் படியாகும். டீன் ஏஜ் பெண்களின் சுரப்பிகளின் மாற்றங்கள் காரணமாக சருமத்தில் துளைகளும் அடைப்புகளும் ஏற்படக்கூடும். ஆகையால் இதை பயன்படுத்தினால் துளைகளில் உள்ள அழுக்குகளை எடுத்து விடலாம்.
அழகு சாதனங்கள் நல்ல நிறுவனங்களில் தயார் செய்யப்பட்ட தரம் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துங்கள். குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் இவற்றை பயன்படுத்துவது நமது சருமத்திற்கு ஈரப்பதமூட்டி வெடிப்புக்கள் வரமல் தடுக்கும்.
ஒப்பனை செய்யும் பொருட்களை தவிர்க்கவும் அதிக அளவு ஒப்பனை செய்யாமல் இருப்பது நல்லது. அவை சருமத்திற்கு கேடு விளைவிப்பவையாகும். சருமத்தில் கரும் புள்ளிகள், பருக்கள் ஆகியவற்றை அவை வரவழைத்து விடும். கடுமையான ரசாயன பொருட்களை கொண்டிருப்பதால் டீன் ஏஜ் பெண்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் .
மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள் குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமப் பிரச்சனைகளையும், அது தொடர்பான பிற பிரச்சனைகளையும் உடனடியாக நீக்க முயற்சி எடுங்கள். குளித்த உடன் நல்ல மாய்ஸ்சுரைசரை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும். குளிர் காலத்தில் டீன் ஏஜ் பெண்கள் சரும பாதுகாப்பிற்கு மாய்ஸ்சுரைசர்கள் மிகவும் உகந்ததாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே