குழந்தைகள் சாப்பிடாத காய்களில் ஒன்று தான் கத்திரிக்காய். அந்த கத்திரிக்காயை உருளைக்கிழங்குடன் கலந்து சப்ஜி போன்று செய்து கொடுத்தால் அவர்கள் ருசித்து சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியில் குறைவான அளவில் மசாலாப் பொருட்கள் சேர்த்திருப்பதால் அளவான காரத்துடன் மிகுந்த சுவையில் இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜியை எப்படி செய்வதென்று கவனிப்போம்.
தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு – 5 வேக வைத்து தோலுரித்தது கத்திரிக்காய் – 1 சிறிய துண்டுகளாக்கப்பட்டது தக்காளி – 2 நறுக்கியது பூண்டு – 5 பல் நறுக்கியது பச்சை மிளகாய் – 2 நீளமாக கீறியது சீரகப் பொடி – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 1 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் நறுக்கியது
செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் வரமிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். அதில் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் கத்திரிக்காய் மற்றும் பேபி உருளைக்கிழங்கு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு தக்காளி உப்பு சீரகப் பொடி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி தீயை குறைவில் வைத்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். காய்கறிகளானது நன்கு வெந்ததும் அதனை இறக்கிஅதில் கொத்தமல்லியைத் தூவினால் சுவையான உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சுவையான சப்ஜி தயார்……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே