ஆனால் இந்த நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக எந்த பணி நியமனமும் செய்யப்படவில்லை என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். வங்கித் துறையில் பல ஆயிரக்கணக்கான பணி நியமனங்கள் தொடந்து செய்யப்பட்டு வரும் நிலையில் எல்.ஐ.சி.,யில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாறிவரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக மத்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ‘மினி ஆபிஸ்’ கிளைகளை நிர்வகிக்க இந்த நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கான பணி வாய்ப்புகளை இந்த நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
என்ன பதவி ?: அசோசியேட் (மினி ஆபிஸ்) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தப் பதவி 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அமைகிறது. இந்தப் பதவிக்கு எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஏற்கெனவே எச்.ஜி.ஏ., ஏ.ஏ.ஓ., ஏ.ஓ., ஏ.டி.எம்., என்ற பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் : எல்.ஐ.சி., நிறுவனம் அறிவித்துள்ள இந்த அசோசியேட் காலியிடங்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 152 உள்ளன. கேரளாவில் 45 உள்ளன.
தேவைகள் என்ன ? : மேற்கண்ட பணித் தகுதிகளுடன் எல்.ஐ.சி., நிறுவனத்தில் அலுவலகப் பணிகளில் வரையறுக்கப்படும் சில பணிகளை செய்யத் தயாராக இருக்க வேண்டும். முழுமையான விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரரின் வயது 63க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய முன்னாள் எல்.ஐ.சி., ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை szmini@licindia.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.12.2013
இணையதள முகவரி : www.licindia.com/காரீர்ஸ்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே