மாம்பழ ஐஸ்கிரீம்:
நன்கு சுண்டக் காய்ச்சிய 2 கப் பாலில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். இத்துடன் மசித்த 3 கப் மாம்பழம் சேர்த்து மிக்ஸியில் ஒருஅடி அடிக்கவும்.அதனுடன் 150 கிராம் ப்ரெஷ் க்ரீம் மற்றும் கால் டீஸ்பூன் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு அழுத்தமான அலுமினிய பாக்ஸில் நிரப்பி ஃப்ரீஸரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து செட் செய்து எடுத்து மீண்டும் அடித்து செய்யவும். இது நல்ல ஐஸ் க்ரீமாக செட் ஆனதும் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிய மாம்பழத்தைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: இதேபோல் தர்பூசணி, ஆரஞ்சு பழச்சாறு கொண்டும் செய்யலாம்.
கேரட் ஐஸ்கிரீம்:
நான்கு கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்த விழுதுடன் 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் நன்கு சூடுவந்ததும் அதில் ஒரு கப் பாலையும் சேர்த்து கலக்கவும். ஆறியதும் 1/4 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ், 1/2 டீஸ்பூன் ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும். அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
வாழைப்பழ ஐஸ்கிரீம்:
ஒரு ஜாடியில் வாழைப்பழம் 2, வேர்க்கடலை வெண்ணெய் 1, கோகோதூள் 1/2 மேஜைக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் 3 சொட்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடித்து ஃப்ரீஸரில் வைக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து அலகரித்து பரிமாறவும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே