இன்றைய நவீன உலகில் பெண்கள் பலர் அழகை அதிகரிக்க வேண்டுமென்று நிறைய பணத்தை செலவழித்தும் தற்காலிகமாகத் தான் அழகை அதிகரித்து வெளிப்படுத்த முடிகிறதே தவிர, நிரந்தர அழகு கிடைப்பதில்லை. இப்படி தற்காலிக அழகானது மேக் அப் மூலம் தான் வருகிறது. மேக் அப் மட்டும் இல்லாமல் இருந்தால், அவர்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது . ஏனெனில் அந்த அளவில் மேக் அப் போட்டு முகத்தின் இயற்கை அழகையே பலர் கெடுக்கின்றனர்.
இந்தியப் பெண்களின் சிறப்பே மேக் அப் இல்லாமலும் அழகாக காணப்படுவது தான். ஆனால் தற்போதோ மேக் அப் இல்லாமல் பார்க்கவே முடிவதில்லை. இதற்கான தீர்வு , உங்கள் இயற்கை அழகை மேலும் மெறுகூட்ட கிழே உள்ளவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் நீங்கள் இழந்த இயற்கை அழகை மேலும் மெறுகூட்டலாம்.
ஃபேஸ் பேக்…
வறட்சியான சருமம் உள்ளவரா நீங்கள் ? அப்படியானால், 1/2 கப் ஓட்ஸ் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, பின் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பருக்களை போக்க…
முகத்தில் உள்ள பருக்களை போக்க, இரவில் படுக்கும் முன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, பருக்கள் உள்ள பகுதியில் தடவி, ஒரு சுத்தமான துணியால் மூடி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவினால்,பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
கரும்புள்ளியைப் போக்க…
கரும்புள்ளியைப் போக்க, எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைக் கொண்டு துடைத்து எடுக்க நாளடைவில் மறைந்துவிடும்.
சருமத்தின் ஈரப்பதத்திற்கு …
சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கண்ட கண்ட கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசர் க்ரீமை பயன்படுத்ததாமல், தினமும் ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.
இறந்த செல்களை அகற்ற ..
சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்களை அகற்ற, பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ அகன்று புதிய செல்கள் தோன்றும்.
மென்மையான சருமத்தைப் பெற…
சருமம் மென்மையாக இருக்க அதை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
நேச்சுரல் சன் ஸ்க்ரீன் லோசன்
சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வெள்ளரிக்காய் சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, வெளியே செல்லும் ஒரு மணிநேரத்திற்கு முன் சருமத்தில் தடவி ஊற வைத்து சென்றால், சருமத்தில் சூரியக் கதிர்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
கண்களை பாதுகாக்க…
இரவில் தூங்கும் போது ஒரு வெள்ளை துணியில் சிறிது ரோஸ் வாட்டரை ஊற்றி அதை கண்களில் ஒத்தி வைத்து காலையில் கழுவ கண்கள் பிரகாசமாக இருக்கும்.
அழகான சருமத்திற்கு …
தேங்காய் பாலைக் கொண்டு தினமும் சருமம் மற்றும் உதடுகளை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கப்பத்தோடு , சருமம் அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே