எப்போதும் ஒரு சிரிப்பு, தலைசாய்ந்து நடக்கும் நடை, கிண்டல் பேச்சு போன்ற கார்த்தியின் கிளிசேக் மேனரிசம் இந்தப் படத்தில் இருக்காது. அவர் இதில் ஸ்டைலான பிளேபாய் கேரக்டர் செய்திருக்கிறார்.
அவர் கேரக்டரின் பெயர் சுகன். நான்காவது வகுப்பிலிருந்தே உடன் இருக்கும் நண்பனாக பிரேம்ஜி. அவரது பெயர் பரசு, கார்த்தியின் கேர்ள்பிரண்ட் பிரியங்காவாக ஹன்சிகா. படத்துக்காக ஹன்சிகா 8 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக நடித்திருக்கிறார்.
மூன்று பேரும் ஒரே ஆபீசில் வேலை செய்கிறார்கள். வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று அலைவர்கள் (வெங்கட்பிரபு படத்தில் அது இல்லாமலா). கார்த்தியிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஒரு சனிக்கிழமை ஒரு பார்ட்டிக்கு போகிறார்கள்.
அங்கு பிரியாணி இல்லை. அதனால் எப்படியாவது பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கார்த்தியும், பிரேம்ஜியும் காரை எடுத்துக்கொண்டு ஆம்பூர், அல்லது வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட்டு வரலாம் என்று கிளம்புகிறார்கள்.
போன இடத்துல பிரேம்ஜி ஒரு பிரச்னையை இழுத்துவிட சின்ன பிரச்னை பெரும் பிரச்னையாகி இவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிகிற நிலைமை வருகிறது. அதிலிருந்து இவர்கள் எப்படி எஸ்கேப் ஆகி வருகிறார்கள் என்பதுதான் கதை. அந்த பிரச்னையை சொல்லிவிட்டால் படம் பார்க்குபோது இண்ட்ரஸ்ட் குறையலாம். சாரி….!!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே