திரையுலகம்,முதன்மை செய்திகள் உத்தம வில்லனுடன் இணையும் அப்பாடக்கர்

உத்தம வில்லனுடன் இணையும் அப்பாடக்கர்

உத்தம வில்லனுடன் இணையும் அப்பாடக்கர் post thumbnail image
கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்துக்கான ஆரம்ப கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதன் முதலாக கமல்ஹாசனுடனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நகைச்சுவை நடிகர் சந்தானம் பெற்றுள்ளார். கமல் ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓவ்வொரு முக்கிய திரைப்படத்திற்கு பின்னரும் ஒரு நகைச்சுவை படத்தில் நடிப்பதை கமல்ஹாசன் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் இந்த திரைபடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நகைச்சுவை படங்களில் பட்டையை கிளப்பும் இயக்குனர் எம்.ராஜேஷ் தான் இந்த படத்திற்கு வசனகர்த்தா, அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இந்த படத்தில் இணைவதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. “வசூல் ராஜா MBBS”, “பம்மல் K சம்பந்தம்” என்று கமல்ஹசனின் என்றைக்கும் ரசிக்கும் நகைச்சுவை திரைப்படங்களில் இந்த படமும் இடம் பெரும் போல் தெரிகிறது.

Kamal Haasan and Santhanam will share the screen for upcoming film Uthama Villain to be produced by Thirrupathy Brothers. Kamal Haasan’s friend and actor-director Ramesh Aravind is going to direct this movie. Kajal Agarwal will play the leading lady, romancing Ulaganayagan for the first time. Kamal, Santhanam teaming together and M.Rajesh penning the dialogues.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி