‘சங்கராபுரம்’ ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:-
இந்தப் படத்தோட ஆடியோ சி.டியை கே.எஸ்.ரவிக்குமார் சார் ரிலீஸ் பண்ண நான் வாங்கிக்கிட்டேன். அதுல நான் வாங்கிட்டேன்னு சொல்றதை விட அவர் ரிலீஸ் பண்ணினார்னு சொல்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். காரணம் சிறந்த கமர்ஷியல் டைரக்டர்கள் லிஸ்ட்ல அவர் எப்போதுமே இருக்கிறார்.
எப்போதுமே கமர்ஷியல் ஹிட் கொடுக்கிற டைரக்டர்களால தான் தயாரிப்பாளர்கள் வாழ முடியும். அப்படிப்பட்ட டைரக்டர்கள் லிஸ்ட்ல அவர் மிகவும் உச்சத்துல இருக்கார். அப்படிப்பட்ட ராசியான அவரின் கைகளால இந்தப்படத்தோட ஆடியோ ரிலீஸ் பண்ணியிருக்கிறதால இந்தப்படத்தோட ஹீரோ ஹரிக்குமாருக்கு இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் படமா அமையும்.
சமீபகாலமாக படம் ரிலீசாகும்போதே இன்டெர்நெட்லயும் படம் ரிலீஸ் ஆயிடுது. தியேட்டர்ல போய் படம் பார்க்கணும்கிற நிலைமை மாறி நெட்லயே தரவிறக்கம் பண்ணிக்கலாம், வி.சி.டியில பார்த்துக்கலாம்கிற நிலைமை வந்துடுச்சு. 30 ரூபாய் குடுத்தா ஒரு சிடியை வாங்கி படம் பார்த்துடுறாங்க. இந்த சூழ்நிலையில ஒரு படம் ஓடணும்னா அது ரசிகப்பெருமக்கள் கையில தான் இருக்கு. அவங்க தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கணும்.
இப்ப உள்ள இளம் ரசிகர்கள் எல்லாருமே கம்ப்யூட்டர், லேப்டாப்லயே படத்தை தரவிறக்கம் பண்ணி பார்த்துடுறாங்க. அவங்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன். இத்தனை கோடி ரூபாயை போட்டு ஒரு படம் எடுத்து அதை விற்பனை செய்வதற்கு படாத பாடுபட்டு 1 கோடி ரூபாயில ஒரு படம் பண்ணினாலும் அதுக்கு இன்னொரு 1 கோடி ரூபாயை பப்ளிசிட்டிக்காக செலவு பண்ண வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில தமிழ்சினிமா உலகம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ‘தரவிறக்கம்’ செய்து ரசிகர்கள் பார்த்து தங்களுடைய ‘தரத்தை இறக்கி’க் கொள்ளக் கூடாது.
ஒரு படம் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள்ல எல்லாம் ஓடி எந்த பிரயோஜனும் இல்லை, செங்கல்பட்டு ஏரியாவைத் தாண்டி பி அண்ட் சி ஏரியாக்கள்ல உள்ள தியேட்டர்கள்ல ஓடினாத்தான் அந்தப்படத்தால தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வரும். அந்த வகையில இந்தப்படம் பி அண்ட் சி ஏரியாக்கள்ல ஓடி பெரிய அளவில் ஹிட்டாகணும்னு சொல்லி இறைவனை வேண்டிக்கிறேன்.
எ
விவேக் சொல்றத பார்த்தா மல்டிப்ளெக்ஸ் அதிபர்கள் திரைப்பட அதிபர்களை தொல்லை கொடுத்து திரைப்படங்களை வெளியிடுவது போல் இருக்கிறது. நல்ல கதைகள் இருந்தால் விளம்பரம் தேவையில்லை என்பதை விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் நிருபித்து கொண்டிருகின்றன. இவர் நகைச்சுவை நடிகர் என்பதை மேடைகளிலும் நிருபிக்க ஆரம்பித்துவிட்டார். மொக்கை படம் எடுத்தா தான் பல கோடி கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே