“வித்தியாசமான நகைச்சுவை” என்கின்ற தமிழ் திரையுலகின் இன்றைய எதார்த்தத்தில் சிக்கி தமிழ் ரசிகர்கள் படும் பாடு எவ்வளவு நாள் தொடரும் என்று தெரியவில்லை. நகைச்சுவையை மையமாக வைத்து கருத்துக்களை ஊட்ட ஆரம்பித்த இயக்குனர்களே நகைச்சுவை தான் என் வழி என களம் இறங்கி விட்டதால் சற்குணமும் அந்த கும்பலில் கரைய யத்தனித்து மொக்கை வாங்கி இருக்கிறார். இதில் நஸ்ரியாவின் கேவலமான விளம்பரம் வேறு… இந்த படம் ஒரு மலையாள படத்தின் தழுவல் என்பது கொசுறு செய்தி.
தனுஷ்க்கு நஸ்ரியா மேல் எப்படி காதல் வந்தது என்பதை சொல்லவே இயக்குனர் சற்குணத் திற்கு நாக்கு தள்ளிவிட்டது. முதல் பாதியில் வரும் எரிச்சலை சொல்லி மாள முடியாது நஸ்ரியாவை காதலில் விழ வைக்க, தனுஷ் போடும் திட்டங்கள் நகைச்சுவைக்கு பதில் நல்ல மொக்கைகள்…காப்பாத்து ஆண்டவா…
தனுஷை சொல்லி குற்றமில்லை…அவர் மிக சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அவர் வரிசையாக கூட்டணி அமைக்கும் இயக்குனர்கள் தான் அவரை பார்த்தாலே நம்மை காத தூரம் ஓட வைத்து விடுவார்கள் போல் இருக்கிறது. பரத்பாலாவிடம் சிக்கி, இப்போது சற்குணத்திடம் சிக்கி, அடுத்து வெற்றி மாறனாவது அவரை கரை சேர்ப்பாரா என்று பார்போம்.
நஸ்ரியாவை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை… இவர் கதையை கேட்டு நடித்தாரா என்பது சந்தேகமே…அவரது நவரசங்களில் ஒரு குறை…..நஸ்ரியா ஒரு கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் அவர் காதல் காட்சிகளில் நடித்ததை பற்றி நாம் சொல்ல ஒன்றும் இல்லை.
சந்தானம் இல்லை இந்த படத்தில் அப்ப யார் இருப்பா சொல்லுங்க பார்க்கலாம் சரியா சொன்னீங்க நம்ம பரோட்ட சூரி தான்அவரை விட இமான் அண்ணாச்சி நம்மை சிரிக்க வைக்கிறார். இந்த ஜோடியை விட சத்யனும்,சுமனும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.
இன்னைக்கு நகைச்சுவை திரைப்படம் தான் ஓடுது என்று சற்குணம் போட்ட திட்டம் அவரை கரை சேர்க்குமா… தனுஷை வைத்து நகைச்சுவையா இல்லை நகைச்சுவையை வைத்து தனுஷா… ஏங்க நான் ஒழுங்கா தானே கேட்கிறேன்.
இந்த திரைபடத்தை நீங்கள் மதிப்பிட இங்கே அழுத்தவும்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே