‘வேணாம் மச்சான் வேணாம்’ சிணுங்கும் ஹன்சிகா


காணொளி:-

கோடம்பாக்கத்தினரை தூக்கி வைத்து கொண்டாடுவதில் நம் தமிழ் ரசிகர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது…அரசால் புரசலாக குஷ்பூ கோவில் அது இது என்று பேச்சு அடிபட்டது…கடைசியில் பார்த்தால் திருச்சியில் அதை காட்டி கும்பாபிஷகமே நடத்திவிட்டார்கள் நம்மவர்கள்.

குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டி சலித்து போன ரசிகர்களின் அடுத்த தலைமுறையினர் இப்ப பிடித்திருப்பது குஷ்பூ போலவே கஷ்கு மொஸ்குனு இருக்கும் மேலும் கோடம்பாக்கத்தினரால் சின்ன குஷ்பு என்ற அடையாளப்படுத்தபடும் ஹன்ஸிகா தான் அவருக்கு கோயில் கட்டத் ஒரு குரூப் ரெடியாகி விட்டது.

கோயில் கட்ட இடமெல்லாம் பார்த்து, செங்கலுக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டதாக செய்தி வந்த நிலையில், ‘வேணாம்… மச்சான் வேணாம் என்று அவர் படத்தில் வரும் பாடலை போல் எனக்கு கோயில் கட்ட வேணாம்’ என கண் சிமிட்டுகிறார்.

குஸ்பூவிற்கு திருச்சி என்றால் ஹன்சிகாவுக்கு மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமானத்துக்கான செங்கல், ஜல்லி வாங்குவதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். செப்டம்பரில் கோவில் கட்டிட வேலைகள் துவங்கும் என்றும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் ஹன்சிகா கோவில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்கின்றனர். பூஜை செய்ய பூசாரியும் நியமிக்கப்பட உள்ளார்.

இதற்கு இடையில் ஹன்சிகாவிடம் இதை பற்றி கேட்ட பொழுது அவர் பெருந்தன்மையாக “சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன். ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்,” என்றார்.
[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago