சமீபத்தில் வெளிவந்த பிரபலமான பத்திரிகையான போர்ப்ஸில் டோணியின் பெயர் இடம் பெற்றுள்ளது, அதுவும் எதில் தெரியுமா பெரிய பணக்காரர் பட்டியலில் தான். உலகளவில் பெரும் பணக்கார விளையாட்டு வீரர், வீராங்கனைகள் குறித்த பட்டியலில் சச்சினை விட பெரிய பணக்காரர் டோணி என குறிப்பிடப்பட்டுள்ளது. டோணி இந்திய அளவில் தான் சச்சினை மிஞ்சியுள்ளார் ஆனால் சர்வதேச அளவில் உலகப் புகழ் பெற்ற ஓட்டப் பந்தய வீரரும், 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ளவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான உசேன் போல்ட்,கால்பந்து சூப்பர் ஸ்டார்கள் வேயன் ரூனி, பெர்னாண்டோ டோரஸ்,டென்னிஸ் சூப்பர் ஸ்டார் நவோக் ஜோகோவிக் ஆகியோரையும் கூட அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில், முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் பிளாய்ட் மேவேதர், நம்ம டோணி இருப்பது 31வது இடம். சச்சின் எங்கு இருக்கிறார் தெரியுமா 78வது இடம். டென்னிஸ் தான் உலகளவில் அதிகம் பணம் விளையாடும் இடம் பரிசு தொகையும் கொஞ்சம் நஞ்சமல்ல ஆனால் இன்று டென்னிஸ் உலகில் கொடி கட்டி பறக்கும் ஜோகோவிக் இருப்பது 62வது இடத்தில் தான்.
டோணியின் சம்பாத்தியம் 26.5 மில்லியனாகும். இது போக விளம்பரங்கள் மூலம் இவர் தனியாக 23 மில்லியன் டாலரை அள்ளுகிறாராம். டெண்டுல்கரின் சம்பாத்தியம் 18.6 மில்லியன் டாலராகும். விளம்ரபர வருவாய் 16.5 மில்லியன் டாலராகும். முதலிடத்தில் உள்ள மேவெதரின் சம்பாத்தியம் 85 மில்லியன் டாலராகும். கடந்த 11 வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர் கோல்ப் சாம்பியன் டைகர் உட்ஸ்தான். தற்போது அவர் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். அவர் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 59.4 மில்லியன் டாலராகும். விளம்பரம் மூலம் சம்பாதிப்பதில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியைக் கூட அடித்து பின்னுக்கு தள்ளியுள்ளார் டோணி.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே