நடிகை ரேஷ்மியால் இப்பொழுது கன்னட திரையுலகில் ஒரு பரபரப்பு கூடியுள்ளது…இவர் வேறு யாரும் அல்ல இனிது இனிது, தேநீர் விடுதி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான். தமிழ் தவிர கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது கன்னடத்தில் ஸ்வராஞ்சலி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு தான் ஒரு பெரிய ரகளையே நடந்து கொண்டிருக்கிறது. அவர் எழுப்பிய ஒரு புகார்…அந்த படத்தின் தயாரிப்பாளரை பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது, இப்படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பாக்கி சம்பளத்தை தரமால் இழுத்தடிப்பதாகவும், கேட்டாமல் தகாத வார்த்தையால் படு கேவலமாக திட்டுவதாகவும் கன்னட நடிகர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரே கூறியுள்ளதாவது : “ஸ்வராஞ்சலி என்ற கன்னட படத்திற்காக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் என்னை அணுகினார். படத்திற்கு சம்பளமாக ரூ.4 லட்சம் தருவதாக சொன்னார். நானும் சம்மதித்து, படத்தில் நடித்தேன். படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. ஆனால், எனக்கு பேசியபடி சம்பளத்தை முழுவதுமாக தயாரிப்பாளர் தரவில்லை. அந்தபணத்தை நான் கேட்டபோது பணத்தையும் தரவில்லை மேலும் என்னை ரொம்ப கேவலமாக திட்டிவிட்டார். இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.
நடிகைகளை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்கும் தயாரிப்பாளர்கள்….சம்பளத்தை கொடுக்க மட்டும் அஞ்சுவது ஏனோ…[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே