நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்து பிரிந்துள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காதது தான் இந்த பிரிவுக்கு காரணமாக கூறப் படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் கூட திருமணத்துக்காக காத்திருந்த தன்னை கைவிட்டு விட்டதாக கலங்கினாலும், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். முதலில் சிம்பு பின்பு பிரபுதேவா தற்பொழுது ஆர்யா என்று காதல் கிசுகிசுகளுக்கு கொஞ்சமும் அவர் இடைவெளி கொடுப்பதில்லை.
தெலுங்கிலும் தமிழ் படங்களில் நடிக்க அவரை சமீபத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளானர், பிரபுதேவாவினால் ஒரு சிறிய இடைவெளி விட்டு மீண்டும் வந்திருக்கும் நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். துன்பங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மன உறுதியை அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன். பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு. தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும். த்ரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை”
சினிமா என்றாலே அது ஒரு கண்ணாடி வாழ்க்கைதான்…சிறிய அதிர்வுக்கும் என்றாலும் அது சுக்கு நூறாகிவிடும் என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்துள்ளர்.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே