விஜய் பன்ச் இல்லாத துப்பாக்கி…தோட்டா சீறுமா


காணொளி:-

துப்பாக்கி திரைபடத்தில் விஜய்க்கு எந்த பஞ்ச் டயலாக்கும் கிடையாதாம், ரசிகர்களுக்கு எப்படியோ விஜய் எப்படி ஒத்துக் கொண்டார் என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருகிறது. முருகதாசை கேட்டால் இப்படி சொல்லுகிறார் “ஏன்னா, படமே செம பஞ்ச்!”

ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி துப்பாக்கி !விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அடிபடுகிறதே?

“என்னங்க இது க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம்.
ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர் டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை. ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம். ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும்!

இந்தி கஜினி, துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே..சென்னையை மறந்துடீங்களா?

இந்தி கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன்.
காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?

இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, என்னது நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா, பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு. ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர்.
அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய் ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க.
ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!

விஜய் சுருட்டு பிடிக்கிற துப்பாக்கி’ போஸ்டர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சு இருந்தாங்களே?

என் படங்கள்ல வில்லன்கூட ஸ்மோக் பண்ண மாட்டார். பள்ளிக்கூடப் பெண்கள் காதலிக்க மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு நானே வெச்சுக்கிட்ட கட்டுப்பாடுகள். ஆனா, துப்பாக்கி’யில் அந்தசுருட்டு ஷாட் தவிர்க்கவே முடியலை.ஆனா, பப்ளிசிட்டிக்கு அதை அனுப்பிச்ச பிறகு எனக்கே ரொம்ப உறுத்தலா இருந்தது. அதைத் தூக்கிடலாம்னு நானே யோசிச்சுட்டு இருந்தப்ப, அந்த எதிர்ப்பு வந்தது. நாங்களே அதை நீக்கிட்டோம். யாரோட வற்புறுத்தலுக்கும் பயந்து அதை எடுக்கலை. ஆனா, இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும்.
ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே? எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணுதோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே? அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!

விஜய் இந்தி ரௌடி ரத்தோர்’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கார். நீங்க ளும் அடுத்து இந்திப் படம்தான் இயக்கப் போறீங்க ரெண்டு பேரும் இந்தியிலும் இணைவீங்களா?

அந்த அளவுக்கு இன்னும் யோசிக்கலை. இப்ப எங்க ரெண்டு பேர் கவனமும் துப்பாக்கி’ மேல் மட்டும்தான். மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடிஇருக்கார். நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். இருந்தாலும் சொல்லிட்டேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு பாடியிருக்கார். ஆல்பத்துல அது நிச்சயம் ஹைலைட். துப்பாக்கி’ ஷூட்டிங் சமயம்தான், சார் பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’னு கேட்டார். தாராளமா! அதே மாதிரி நாளைக்கு என் இந்திப் படத்துக்குக் கூப்பிட்டாலும் வருவீங்கதானே’னு ஜாலியா கேட்டேன். ஓ, அப்படி ஒண்ணு இருக்கா.
நீங்க கூப்பிட்டாலும் வருவேன்’னு சொல்லியிருக்கார். இதுல மேட்டர் என்னன்னா என் அடுத்த இந்திப் படம் துப்பாக்கி’ ரீ-மேக். அக்ஷய் குமார் நடிக் கிறார். அதனால, விஜய் எனக்குக் கொடுத்த அந்த சாய்ஸைப் பயன்படுத்திக்க ஏகமா வாய்ப்பு இருக்கு! ரமணா’வுக்குப் பிறகுதான் விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு வந்தார்.

விஜய்கிட்டேயும் அரசியல் ஆர்வம் இருக்கு. அதுக்கேத்த தோட்டா துப்பாக்கி’யில் இருக்கா?

ஹீரோக்களின் அரசியல் ஆசைக்குப் படம் பண்றது என் வேலை இல்லை. என் கதைக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். ஹீரோவுக்கு அந்தப் படம் ஹிட்டாகணும், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகணும். அவ்வளவுதான். ரமணா’வுக்குப் பிறகு விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும், அதே ரமணா’ தெலுங்கு ரீ-மேக் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி சார் அரசியல்ல நுழைஞ்சதும் நானே எதிர்பார்க்காம நடந்தது!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago